மட்டக்களப்பில் இரு குற்றச்செயல்களில் ஈடுபட்ட நால்வர் கைது
மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவரும் வீடுகளை உடைத்து திருடிய இருவர் உட்பட 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு கிரான்குளம் மற்றும் வவுணதீவு கரவெட்டி பகுதிகளை சேர்ந்த நால்வரே நேற்று (18.09.2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யும் இரு வீடுகளை பொலிஸார் முற்றுகையிட்டனர்.
ஒரு இலட்சம் திருட்டு
இதன்போது வீட்டின் நிலப்பகுதியில் கான் ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்து 120 லீற்றர் கோடாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதேவேளை கரவெட்டி பிரதேசத்தில் கடந்த ஒருமாதத்திற்கு முன்னர் 3 வீடுகளை உடைத்து ஒரு இலட்சம் ரூபா பணம், மின்விசிறி மற்றும் ஐபோன் போன்றவை திருடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
