அமெரிக்கா துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகின! பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு
அமெரிக்காவின் - வாஷிங்டன் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள தகோமா எனும் நகர பகுதியிலுள்ள வீடொன்றிலேயே இவ்வாறு திடீரென துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரண்டு பெண்கள், ஒரு ஆண் என மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும்,ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நடைபெற்றபோது அந்த வீட்டின் முன்பாக சந்தேகநபரொருவர் காணப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் யாரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில்,வீட்டில் இருந்து யாரும் வெளியேற வேண்டாமெனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.