முல்லைத்தீவில் போதைப்பொருளுக்கு அடிமையான நால்வர் கைது
முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கு கிராமத்தினை சேர்ந்த குடும்பஸ்தர் உள்ளிட்ட நால்வர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டிருந்த வேளை முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (09.08.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனையில் உறுதி
கைதுசெய்யப்பட்ட நபர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸார் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்போது முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்த பரிசோதனையில் இவர்கள் நால்வரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது.
இதற்கமைய நால்வரையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில்
முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri