கொக்குத்தொடுவாயில் மின்கலம் வெடிப்பு: நால்வர் காயம்
கொக்குத்தொடுவாய் பகுதியில் மின்கலம் வெடித்ததில் நான்கு கன்னிவெடி அகற்றும் பிரிவினர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொக்குத்தொடுவாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேம்படி சந்தி வெலிஓயா செல்லும் வீதியில் கன்னிவெடி அகற்றும் பிரிவினர் கன்னிவெடிகள் அகற்றும் பணிக்காக இன்றையதினம் (20.10.2023) சென்றுள்ளனர்.
இதன்போது தமது பணிக்கு தேவையான மின்கலத்தினை பெரும் வெடிச்சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது.
உயிர்சேதம் இல்லை
இதன்போது கன்னிவெடி அகற்றும் பணிக்காக வந்திருந்த ஊழியர் நால்வர் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்த நிலையல் உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சையளித்த பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
அதிரடி காட்டிய அர்ஜுன் டெண்டுல்கர்: 153 ரன் விளாசிய கேரள வீரரின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தல் News Lankasri