பருத்தித்துறையில் நான்கு நாட்களாக தொடரும் மோதல்! விசேட அதிரடிப்படையினர் குவிப்பு
பருத்தித்துறை - துன்னாலை மேற்கு பகுதியில் இரு கிராமங்களுக்கு இடையேயான மோதல் 4 நாட்களாக நீடிக்கும் நிலையில் ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 25 இற்கும் மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர் என நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது வாள்கள், கற்கள் மற்றும் போத்தல்களினால் மோதல்கள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் 7 முறைப்பாடுகள் நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்துள்ளன என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
சிறப்பு அதிரடிப்படை குவிப்பு
"நான்கு நாள்களுக்கு முன்னர் இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாற்றமடைந்து பின்னர் கிராமங்களுக்கு இடையிலான மோதலாக மாறியுள்ளது.
இதன் காரணமாக சம்பவ இடத்தில் பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
எனினும் மோதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதுடன், இன்று மாலை வரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெயர் குறிப்பிடப்பட்ட 25 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
இன்று நண்பகல் 12.30 தொடக்கம் மாலை 6.30 மணிவரை அடங்கியிருந்த மோதல் மீண்டும் இன்றிரவு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
