இலங்கையில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள் (Photos)
பேராதனை போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் இன்று(17.04.2023) பதிவாகியுள்ளது.
குருநாகல் தோரையாய பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
இந்த பிரசவத்தில், மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தையின் நெகிழ்ச்சியான பதிவு
இதேவேளை பிறக்கும் போது 1.3 கிலோ கிராம் மற்றும் 1.1 கிலோ கிராம் எடையுடன் இருந்த குழந்தைகள், விசேட சிசு சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், மிகவும் அர்ப்பணிப்புடனும் அன்புடனும் அவர்களைப் பார்த்துக்கொள்வதாகவும் இந்த குழந்தைகளின் தந்தை புத்திக ஹேரத் தெரிவித்துள்ளார்.





தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri

ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
