புதையல் தோண்ட சென்ற பெண் உட்பட நால்வர் கைது!
மாத்தளை பலபத்வல, கிரிகல்பொத்த பிரதேசத்தில் உள்ள காணியொன்றில் புதையல் தோண்டியதாக கூறப்படும் நான்கு ஆண்களையும் ஒரு பெண்ணையும் மாத்தளை பிரதேச ஊழல் விசாரணைப் பிரிவினர் இன்று (04) கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் அப்பகுதியில் புதையல் தோண்டிகொண்டிருந்த போது, குறித்த பகுதியில் பாறை ஒன்றை தோண்டுவதற்கு தயாரான நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்ணும் அவரது குழுவினரும் குறித்த இடத்தில் புதையல் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு சடங்குகளை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
புதையல் வேட்டைக்கு பயன்படுத்திய தேங்காய், சுண்ணாம்பு, பலவித எண்ணெய்கள், சில தாயத்துக்கள், கழுத்தில் மாலை, தூபக் கட்டைகள், கற்பூரம், பீர்க்கன்னிகள், கத்திகள், பூக்கள், கைத்தொலைபேசிகள் ஆகியவற்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் பண்டாரவளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த சந்தேகநபர்கள் மாத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.





தலைவனா அவன், முட்டாள்... தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர் Cineulagam

தேசிய விருது வாங்கிய ஜி.வி. பிரகாஷிற்கு, ஏ.ஆர். ரகுமான் கொடுத்த விலையுயர்ந்த பரிசு... போட்டோ இதோ Cineulagam
