நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்
நான்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாலைதீவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் இந்த பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி தலைமையிலுள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுகளுக்கும், அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சுக்கும் இந்த இடைக்கால நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.
நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக தொழிலாளர் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
டிஜிட்டல் பொருளாதார செயல்பாட்டு அமைச்சராக பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சராக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு விவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதித் அமைச்சர் அருண் ஹேமசந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனங்கள் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணத்தின் போது அமைச்சுகளின் செயற்பாடுகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 20 மணி நேரம் முன்

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
