உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முக்கிய கலந்துரையாடல்
அவர் மேலும் தெரிவிக்கையில், ”தமிழ் தேசியப் பேரவை உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளோம்.
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த அதன் தலைவர் சித்தார்த்தன் மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அதன் பங்காளிக் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோருடன் மேற்படி விடயம் தொடர்பில் உரையாடியுள்ளோம்.
அவர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைத்தால் இணைந்து ஆட்சியமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.
அத்துடன், வவுனியா வடக்கு நெடுங்கேணியில் சிங்கள பௌத்த இனவாத தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றுவதனைத் தடுக்கும் வகையில் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கவும் தீர்மானித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
