அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சி தலைவராக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 36 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வு இன்று(13) காலை வலி.மேற்கு பிரதேச சபைக்கு முன்பாக உள்ள அமரரது உருவச் சிலையடியில் இடம்பெற்றது.
பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வின்போது அமரரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அஞ்சலி
இதேவேளை அமிர்தலிங்கம் அறக்கட்டளை நிலையத்தின் ஏற்பாட்டில் மூளாயில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திலும் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதில் அமரரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் வலி.மேற்கு பிரதேசசபை தவிசாளர் ச.ஜயந்தன் ,பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 8 மணி நேரம் முன்

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam
