இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரின் வீட்டில் திருட்டு
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஜித்ர சேனாநாயக்கவின் (Sachithra Senanayakke) வீட்டில் திருடர்கள் நுழைந்து பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு (Colombo) பன்னிபிட்டிய, கலல்கொட கிராமோதய மாவத்தையில் அமைந்துள்ள அவரது வீட்டிலேயே இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பெறுமதியான கைக்கடிகாரங்கள், மடிக்கணினிகள், தங்கம் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
அத்துடன், வீட்டிலிருந்த பாதுகாப்பு கமரா அமைப்பின் சேமிப்புக் கருவியையும் திருடர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அதேவேளை, திருட்டு நடைபெற்ற நேரத்தில் சஜித்ர சேனாநாயக்கவின் வீட்டில் யாரும் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், திருடர்கள், தரைத்தளத்தில் இருந்த ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த சொத்துக்களை திருடிச் சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
காரை நிறுத்தச்சொல்லி இறங்கி குதித்துவிட்டார்.. தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை! கதறும் குடுபத்தினர் Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri