முன்னாள் ஜனாதிபதி மகிந்தவைச் சந்தித்த தென்கொரிய முன்னாள் தூதுவர்
தென்கொரியாவின் முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் தென்கொரியத் தூதுவருமான ஜொங்-மூன் சோய், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைக் கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பானது நேற்றுமுன்தினம்(27.06.2026) இடம்பெற்றுள்ளது.
விசேட வைத்திய நிபுணர்கள் கட்டணங்களில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு! வைத்திய நிபுணர் முன்வைக்கும் குற்றச்சாட்டு
தென்கொரிய முதலீட்டு வாய்ப்புகள்
இந்தச் சந்திப்பின் போது, ஆசிய நாடுகளுக்கு இடையிலான கூட்டாண்மையின் முக்கியத்துவம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருதரப்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள "ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு" குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
நம்பிக்கையான, பாதுகாப்பான மற்றும் நிலையான ஆசிய பிராந்திய ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதற்கான வாழ்த்துக்களை இதன்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பகிர்ந்து கொண்டார்.
மேலும், தனது ஜனாதிபதி பதவிக்காலத்தில் பிராந்திய நாடுகளில் தென்கொரிய முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம், புதிய ஆசிய முன்முயற்சிகளுக்காக ஜொங்-மூன் சோய் ஆற்றிய பங்களிப்பையும், அவரது இந்த உத்தியோகபூர்வ சந்திப்பையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.






பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam