கைது செய்யப்பட்ட மகிந்த தரப்பு அரசியல்வாதிக்கு பிணை
புதிய இணைப்பு
இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட மொட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்கவுக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிற்பகல் பிணை வழங்கியுள்ளது.
காணி ஒன்றின் வரைப்படத்துக்கு அனுமதி வழங்கும் போது இடம்பெற்ற முறைகேடுகள் காரணமாக அரசுக்கு இழப்பு ஏற்படுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டு மிலன் ஜயதிலக்க இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
இவர் தொம்பே பிரதேச சபையின் தலைவராக இருந்த காலப்பகுதியில் இந்த முறைகேடு நடந்தது என்று தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - ராகேஷ்
முதலாம் இணைப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2012 ஆம் ஆண்டு தொம்பே பிரதேச சபையின் தலைவராகப் பணியாற்றிய போது சுரங்க அனுமதி வழங்குவதற்காக தொழிலதிபரிடமிருந்து 600000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri

முகேஷ் அம்பானியின் ரூ 15000 கோடி Antilia மாளிகையின் முதல் மின் கட்டணம் எவ்வளவு தெரியுமா? News Lankasri

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
