வடக்கு மாகாணமே ஆரம்பக் கல்வியில் முதன்மையானது..! முன்னாள் பிரதம செயலாளர் இளங்கோவன் நெகிழ்ச்சி
சிறுவர்களின் கல்வி வளர்ச்சியில் வடக்கு மாகணமே ஆரம்ப கல்வியை கட்டமைத்த முதன்மை பெற்ற மாகாணமாக விளங்குகிறது என முன்னாள் வடமாகாண பிரதம செயலாளர் இ. இளங்கோவன் தெரிவித்தார்.
இன்று(26.08.2026) புதன்கிழமை யாழ். இந்துக் கல்லூரி சபாலிங்கம் மண்டபத்தில் முன்னாள் வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் தணிகாசலம் பிள்ளை எழுதிய இரு நூல் வெளியீடு விழாவில் கலந்து கொண்டு தலையை உரையை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆரம்ப பிரிவு கல்வியில் முன்னேற்றம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நூலாசிரியர் தணிகாசலம் பிள்ளை எங்களுடைய ஆசான் இந்தக் கல்லூரியின் மைந்தன் 15 நூல்களை எழுதி இருக்கிறார் இரு நூல்களை வெளியிட்டு இருக்கிறார்.

எமது வடக்கு கல்விப் புலமானது கல்வியால் உயர்ந்த ஒரு சமுதாயத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்ற தூர நோக்கோடு செயல்பட்டுக் கொண்டிருப்பதால் இவ்வாறான நூல் வெளியீடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
குறிப்பாக ஆரம்ப பிரிவு கல்வியை கட்டமைத்த ஒரு மாகாணமாக வடமாகாணமே முதன்மை வருகின்ற நிலையில் அதற்கு அமரர் டிவகலாவின் பங்கு காத்திரமானது.

நூல் ஆசிரியர் தணிகாசலம் பிள்ளை சிறந்த கல்விமான் தனது தள்ளாடும் வயதிலும் கல்விக்கும் சமூகத்திற்கும் பல்வேறு சேவையை ஆற்றி வருகிறார்.
ஆகவே வடக்கு மாகாணம் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு இவ்வாறான பல நூல்கள் வெளிவர வேண்டும் என்றார்.