மலேசியா முன்னாள் பிரதமர் வைத்தியசாலையில் அனுமதி-செய்திகளின் தொகுப்பு
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது கோவிட் தொற்று பாதிப்பால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து 97 வயதான அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது உடல் நிலை குறித்த கூடுதல் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரத்த சிவப்பணுக்கள் பற்றாக்குறையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மகாதீர் முகமது பல முறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் 1981 முதல் 2003 வரை தொடர்ந்து 22 ஆண்டுகள் பிரதமராக இருந்த மகாதீர் முகமது, 2018-ம் ஆண்டு தனது 92 வயதில் மீண்டும் மலேசியா பிரதமரானது மூலம் உலகின் மிகவும் வயதானவர் என்கிற பெருமையை பெற்றார்.
எனினும் கூட்டணி குழப்பங்களால் 2020-ல் அவரது அரசு கவிழ்ந்து அவர் பதவியை இழந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு,
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam