முன்னாள் பிரதமர் மகிந்த மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் நாடாளுமன்றம் வருகை (Video)
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளனர்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளில் அவர்களின் பிரசன்னமாகியுள்ளதாக தெரியவருகின்றது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியிருந்தார்.
பதவி விலகியவுடன், அவர் திருகோணமலை கடற்படை முகாமில் பாதுகாப்பு காரணங்களின் நிமித்தம் தங்க வைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் நேற்றைய தினம் மீ்ண்டும் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில் இன்றைய தினம் முன்னாள் பிரதமர் மகிந்த மற்றும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளதாக தெரியவருகின்றது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 18 மணி நேரம் முன்

மனைவியை விட்டுவிட்டு உக்ரைன் அழகியுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர்... நாடுகடத்த விரும்பும் மக்கள் News Lankasri
