மின் விநியோகத்தடை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
ஜனாதிபதியாக தாம் பதவி வகித்த காலப்பகுதியில் கையொப்பமிட்ட பல வர்த்தமானி அறிவித்தல்கள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடப்பு அரசாங்கம் மணல் மற்றும் மண் அகழ்வுக்கான அனுமதி பத்திரத்தினை தடை செய்துள்ளமை தமக்கு வியப்பினை அளித்துள்ளது.
அத்துடன் தாம் ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் 65 வர்த்தமானி அறிவித்தல்களில் கையொப்பமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மின் கட்டமைப்பினை புனரமைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்ட நிலையில், அதனை சிலர் விமர்சித்தது மாத்திரமின்றி நகைப்புக்குள்ளாக்கினர்.
அனைத்து வர்த்தமானி அறிவித்தல்களையும் நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று மின் விநியோகத்தடை தொடர்பில் நாம் கவலையடையத் தேவையில்லை என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல் News Lankasri
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri