கோட்டாபய ராஜபக்ச மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை:வெளியான தகவல்
தனது தனிப்பட்ட பாவனைக்காக 19 வாகனங்களை பயன்படுத்தியதாகவும் உணவுக்காக 950,000 ரூபாவை செலவிட்டதாகவும் வெளியான செய்திகள், வதந்திகளாகும் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் ராஜபக்ச சுகீஸ்வர பண்டார விடுத்துள்ள அறிக்கையில், இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை எனவும் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கோட்டாபய, ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எந்த வாகனத்தையும் தவறாக பயன்படுத்தவில்லை என்பதை குறிப்பிட வேண்டும்.
உத்தியோகபூர்வ வாகனம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது
ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகனம் தேசிய கொண்டாட்டங்களின் போது தவிர வேறு எந்த சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தப்படவில்லை என்பது மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
19 வாகனங்கள் அவரது தனிப்பட்ட பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்பது முற்றிலும் தவறான செய்தியாகும்.
கோட்டாபயவின் பாதுகாப்புக்கான வாகனங்கள் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு பிரிவினரால் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அவை ஒருபோதும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
