மீண்டும் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு 3 மாத காலத்திற்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, நாளை (09.07.2023) அல்லது நாளை மறுதினம் (10.07.2023) விக்கிரமரத்ன பணிக்கு சமூகமளிக்க உள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபராக இருந்த விக்கிரமரத்ன கட்ந்த மார்ச் 25ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று மாத காலத்திற்கு அவரின் சேவையை நீடித்திருந்தார்.
3 மாத கால சேவை நீடிப்பு
இந்நிலையில் சி.டி.விக்ரமரத்னவினுடைய சேவை நீட்டிப்பு கடந்த மாதம் ஜூன் 25ம் திகதியுடன் முடிவடைந்தது.
எனினும் புதிய பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் விடயத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் காராணமாக சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும், 3 மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஆசிய நாடுகள் உட்பட... சில நாட்டவர்களின் விசா அனுமதியைக் கட்டுப்படுத்த பிரித்தானியா முடிவு News Lankasri

விஜய்யை நெருங்கிய நபரின் தலையில் துப்பாக்கியை வைத்த பாதுகாவலர் - விமான நிலையத்தில் பரபரப்பு News Lankasri
