முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் மஜீத் காலமானார்
ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பி. மஜீத் என்றழைக்கப்படும் மீராசாஹிபு அப்துல் மஜீத் இன்று (30.06.2026) காலமானார்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் - முஸ்லிம் ஒற்றுமைக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த மூத்த தலைவர்களில் ஒருவராக எஸ்.எஸ்.பி. மஜீத் அறியப்படுகின்றார்.
பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றிய காலத்தில் இலங்கையின் தேசிய ரக்பி அணியின் தலைவராகவும் அவர் செயற்பட்டிருந்தார்.
தேசியப் பட்டியல் ஊடாக
கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்புப் அச்சுறுத்தல் இருந்த காலகட்டத்தில் தனது பதவியை துச்சமாக மதித்து செயற்பட்டதனால், 90 காலப்பகுதியில் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மத்தியில் ஓர் கதாநாயகனாக தென்பட்டதுடன், முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசாவின் நம்பிக்கையை பெற்ற பொலிஸ் அதிகாரியாக மாறியிருந்தார்.

அப்போது முஸ்லிம் மக்கள் மத்தியில் இவருக்கு இருந்த செல்வாக்கு காரணமாக ஐக்கிய தேசிய கட்சியினால் அரசியலுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.
பின்னர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினராக தெரிவானார்.
இதன்போது அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் இருந்தும் அவருக்கு பரவலான வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சுகவீனம் காரணமாக இன்று காலமான அன்னாரது ஜனாஸா தற்போது 201, ஹைலெவல் வீதி, கிருலப்பனை, கொழும்பு – 05 இல் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 6 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri