வைத்தியர் விஜித் குணசேகரவுக்கு விளக்கமறியல்
தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர (Dr. Vijith Gunasekara) எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் விஜித் குணசேகர நேற்று (08) கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து இன்று காலை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

10 மணித்தியால வாக்குமூலம்
சுமார் 10 மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மனித பாவனைக்குதவாத மனித இம்யூனோகுளோபுலின் உள்ளிட்ட தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri