யாழில் ரணிலுக்கு ஆதரவு கோரி களமிறங்கிய முன்னாள் எம்.பி
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக "காஸ் சிலிண்டர்" சின்னத்தில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஆதரவு கோரி யாழ். (Jaffna) மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான யாழ். மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்றைய தினம் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரத்தினை ஆரம்பித்துள்ளனர்.
ஆதரவான துண்டுப்பிரசுரங்கள்
இன்று காலை நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான அணியினர் நயினாதீவு ,அனலை தீவு பகுதிகளில் மக்களை சந்தித்து கலந்துரையாடியதோடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவான துண்டு பிரசுரங்களை விநியோகித்து தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுராதபுரத்தில் ஜெய மகா போதி விகாரையில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டுள்ளதோடு, அனுராதபுரத்தில் இடம்பெறும் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  | 
    
    
    
    
    
    
    
    
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri