உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் குறித்து கருத்து வெளியிட்ட முன்னாள் எம்.பி
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் தமிழ் மக்களின் கையில் இருக்க வேண்டும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுவை இன்று (19.03) தாக்கல் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“உள்ளூராட்சி தேர்தலைப் பொறுத்த வரை வடக்கு - கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணி சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றது.
வடக்கு - கிழக்கின் இருப்பு
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் தமிழ் மக்களின் கையில் இருக்க வேண்டும் என்பது தான் எங்களது வேண்டுகோளாக இருக்கிறது.
ஜனநாயக தமழ் தேசியக் கூட்டணி பெரும்பாலன சபைளில் அதிக ஆசனங்களைப் பெற்று வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
உள்ளூராட்சி சபை அதிகாரம் என்பது வடக்கு - கிழக்கில் தமிழ் மக்கள் தாங்களே தாங்கள் ஆளக் கூடிய வகையில் வாக்களிக்க வேண்டும்.
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள 300, 400 கிலோ மீற்றரில் இருக்கும் தேசிய சக்திகளிடம் கையளிக்காமல் உங்களுடன் இருக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடம் கையளிக்க வேண்டும். அதன் மூலமே வடக்கு - கிழக்கின் இருப்பை தக்க வைக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan
