தோல்வியின் பின்னர் வீதியோர கடையில் பழம் வாங்கிய முன்னாள் எம்.பி
முன்னாள் அமைச்சர் எஸ். பி திஸாநாயக்க தொடர்பிலான காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கொழும்பு - புறக்கோட்டையில் உள்ள வீதியோர கடையில் பழங்களை அவர் கொள்வனவு செய்யும் காணொளியே இவ்வாறு பகிரப்பட்டு வருகிறது.
@lankasrinews முன்னாள் அமைச்சருக்கு நேர்ந்த கதி! #sbdissanayake #colombo #viral #viralvideo ♬ original sound - LANKASRI TAMIL NEWS
முன்னாள் அமைச்சரவை
முன்னாள் அமைச்சரவையில் பிரதான அமைச்சு பதவிகளை வகித்த ஒரு அமைச்சர் வீதியோர கடையில் கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபடுவது அநுர அலையின் தாக்கத்தின் விளைவு என கூறப்படுகிறது.
எஸ். பி திஸாநாயக்க 1994 முதல் 2000 வரை – இளைஞர், விளையாட்டு மற்றும் ஊரக வளர்ச்சிக்கான கேபினட் அமைச்சர், 2000 முதல் 2001 வரை இலங்கை சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர், 2000 முதல் 2001 வரை சமுர்த்தி, கிராம அபிவிருத்தி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை அமைச்சர், 2000 முதல் 2001 வரை - நிதி துணை அமைச்சர் 2001 முதல் 2004 வரை வேளாண்மை, கால்நடை மற்றும் நலன் அமைச்சர்., 2002 முதல் 2009 வரை ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தேசிய அமைப்பாளர், 2010 முதல் 2015 வரை - உயர்கல்வி அமைச்சர், 2015 முதல் ஒகஸ்ட் 2015 வரை பொருளாதார விவகார அமைச்சர், ஒகஸ்ட் 2015 முதல் ஆகஸ்ட் 2019 வரை சுதந்திர கட்சியின் பொருளாளர், 2017 முதல் 2018 வரை சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டிய பாரம்பரிய அமைச்சர், 2019 முதல் 2020 வரை - நிலம் மற்றும் நில மேம்பாட்டு அமைச்சராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |