சுற்றுலா சென்ற இடத்தில் துப்பாக்கியுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது..!
இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர. அனுமதிப்பத்திரம் இல்லாத கைத்துப்பாக்கியுடன் நுவரெலியா பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று(21.04.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவிற்கு சுற்றுலா நிமிர்த்தம் குடும்பத்தினருடன் வருந்திருந்த இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, அவிசாவளை பகுதியிலிருந்து சுற்றுலா வந்திருந்த ஒரு குழுவினருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால், பிரேமலால் ஜெயசேகர தனது கையிலிருந்த கைத்துப்பாக்கியைக் காட்டி அக்குழுவினரை மிரட்டியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதிரடி கைது
அதன் பின்னர் நுவரெலியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம், நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதம ஆய்வாளர் ரவீந்திர பிரேமலால் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு, சந்தேகத்தின் பேரில் பிரேமலால் ஜெயசேகரவைக் கைது செய்துள்ளனர்.

நுவரெலியாவில் ஒருவரைத் துப்பாக்கி முனையில் மிரட்டிய குற்றச்சாட்டிலும் , அனுமதிப்பத்திரம் இல்லாத துப்பாக்கியை தன்னகத்தே வைத்திருந்த குற்றச்சாட்டிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவிடம் கைப்பற்றிய துப்பாக்கி தொடர்பான உரிமத்தை ஆய்வு செய்தபோது இதற்காக உரிமம், 2025.01.23 அன்று ஓராண்டு காலத்திற்கு வழங்கப்பட்டதால், அதன் காலாவதி தற்போது முடிந்துவிட்டது எனவும் AF669 என்ற எண்ணைக் கொண்ட 9 மி.மீ CZ75 ரக துப்பாக்கியும் அதனுடன் 10 தோட்டாக்கள் ஆகியவை கைப்பற்றுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்ந்து விசாரணையின் பின்னர் சந்தேகநபர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam