முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வு திட்டத்தை தன்னிச்சையாகவும் சட்டவிரோதமான முறையிலும், உரிய கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாமல் கொரிய நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்கி அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று(03.09.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வெளிநாடு செல்ல
இதன்போது, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், பிணை வழங்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது என்ற நிபந்தனையும் நீதிபதி விதித்துள்ளார்.
அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழக்கும் மகிந்தவின் நெருங்கிய சகாக்கள் - மறைக்கப்படும் இரகசியங்கள்