முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான ஊழல் வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் மேலும் இருவர் மீது ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு, நேற்றையதினம் (22) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு ஒத்திவைப்பு
மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவியேற்பு விழாவை முன்னிட்டு 2014, நவம்பர் 19ம திகதி இலங்கை முதலீட்டுச் சபையின் நிதியுதவியுடன் 11 பத்திரிகைகளுக்கு துணை விளம்பர அனுபந்தங்களை வெளியிட ஏற்பாடு செய்ததாக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் மேலும் இருவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன் மூலம் அரசாங்கத்திற்கு 1,748,877.76 இலஞ்ச இழப்பை ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் வழக்கு விசாரணை இடம்பெற்றது. அதன்போது அரசுத் தரப்பு சாட்சிகளிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
அதனையடுத்து ஜூலை 30 ம் திகதி மேலதிக விசாரணை நடைபெறும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இலவச உணவுத் திட்டம் உள்ளிட்ட முக்கிய அரசுத் திட்டங்களில் AI தொழில்நுட்பம்: இந்தோனேசியா அதிரடித் திட்டம்!
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan