போரதீவில் முன்னாள் போராளியொருவர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது
விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட முன்னாள் போராளிகள் ஜனநாய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் போராளி ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (01) பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவினரின் இரகசிய தகவலையடுத்து களுவாங்சிக்குடி பொலிஸார் சம்பவதினமான இன்று முன்னாள் போராளியும், முன்னாள் போராளிகள் ஜனநாயகட்சியின் பொருளாளராக செயற்பட்டு வந்த நாகலிங்கம் பிரதீபன் என்பவரையே இவ்வாறு கைது செய்துள்ளனர்.
மட்பாண்ட வீதி போரதீவு பிரதேசத்திலுள்ள அவரது வீட்டினை முற்றுகையிட்டு அங்கு வைத்து இவரை கைது செய்துள்ளனர்.
குறித்த நபரை தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.