சட்டவிரோத வாகன விவகாரம்! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமறைவு
சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட பிராடோ ஜீப் வண்டி, பாகங்களாக பிரிக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்ட நிலையில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த வாகனம் புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதால், சம்பந்தப்பட்ட வாகனம் தொடர்பாக தற்போது வரை எவ்வித தகவலும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என பாதுகாப்பு தரப்பு கூறியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
சாந்த அபேசேகர
புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர பயன்படுத்தியதாகக் கூறப்படும் சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட பிராடோ கார் நேற்று (06) அதிகாலை சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட லேண்ட் குரூசர் பிராடோ காரைப் பயன்படுத்துவதாக சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப்பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, தகவல்கள் தொடர்பாக பல நாட்கள் விசாரணை நடத்திய பின்னர், நேற்று காலை வாகனத்தை காவலில் எடுக்க விசாரணை அதிகாரிகள் குழு புத்தளம் சென்றுள்ளது.
இதன்போது வாகனமானது இரண்டு பகுதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான ஒரு தென்னம் தோப்பிலும், அவரது வீட்டிற்கு அருகிலுள்ள மற்றொரு வீட்டிலும் வாகனம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் விசாரணை அதிகாரிகள் நடத்திய சோதனையில், சம்பந்தப்பட்ட வாகனம் ஏற்கனவே விவசாயத் துறையால் பயன்படுத்தப்படும் பிராடோ வாகனத்தின் இயந்திர எண் மற்றும் சேசிஸ் எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
