மாலைதீவில் குண்டுவெடிப்பு! - முன்னாள் ஜனாதிபதி படுகாயம்
மாலைதீவில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீத் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்றிரவு 8.30 மணியளவில் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகரின் வீட்டிற்கு அருகில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம் பெற்றுள்ளதாக அந்நாட்டு இளைஞர் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் அஹமட் மஹ்லூப் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் அவரது வீட்டில் இருந்து அவரது கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கி நடந்து சென்றுக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்துள்ளது.
இதன்போது, அவருடன் சென்ற மெய்க் காப்பாளர்களுள் ஒருவரும் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
இந்நிலையில், அந்நாட்டு பொலிஸாரும் பாதுகாப்பு தரப்பினர்களும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 51 நிமிடங்கள் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
