யானைக்குட்டி விவகாரம் - நிரபராதியாக விடுதலை செய்யப்பட்ட முன்னாள் நீதிபதி
பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி திலின கமகே, அனைத்து குற்றங்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யானைக் குட்டி ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதற்கு மத்தியில் அவரின் பதவியும் 2016ஆம் ஆண்டு மே மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இன்று அவரை கொழும்பு மேல் நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்துள்ளது.
குற்றச்சாட்டை முன்வைத்த தரப்பினால் குற்றச்சாட்டை நிரூபிக்கமுடியாமல் போயுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி தமித் தொட்டவத்த, பிரதிவாதியான திலின கமகேயை விடுதலை செய்தார்.
எனினும் இந்த வழக்கின் ஏனைய பிரதிவாதிகளான வன பாதுகாப்பு சபையின் பிரதிப்பணிப்பாளர், சபையின் யானைகள் பதிவுக்கான எழுதுவினைஞர் உட்பட்ட மூவரும் இன்று விடுவிக்கப்படவில்லை.
அவர்கள் எதிர்வரும் ஜனவரி 21ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
