அரசாங்கம் வழங்கிய வாய்ப்பை நிராகரித்த முன்னாள் ஊடகவியலாளர்
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தாக்குதலுக்கு உள்ளாகிய பின்னர், அமெரிக்காவுக்கு தப்பிச்சென்ற சிங்கள முன்னணி ஊடகவியலாளர் போத்தல ஜெயந்த, அரச செய்தி நிறுவன தலைமையை ஏற்க மறுத்துள்ளார்.
அண்மையில் இலங்கை வந்திருந்த அவர் சில இடங்களில் கலந்துரையாடல்களிலும் பங்கேற்றார்.
அரச செய்தித்தாள்
இதன்போது தம்மை கடத்திச்சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர் படையதிகாரி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டதாகவும் ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
தாக்குதல் காரணமாக உபாதைகளுக்கு உள்ளான அவர் கருவிகளின் உதவியுடன் நடக்க முடிகிறது. இந்தநிலையில், அவரை அரசு நடத்தும் செய்தித்தாளின் ஆசிரியராக செயற்படுமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அழைப்பு விடுத்தது.
எனினும், அவர் அதனை நிராகரித்த அமெரிக்காவுக்கு திரும்பிச் சென்றுள்ளார். அதேநேரம் மீண்டும் அவர் இலங்கை வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |