ராஜபக்சவுக்கு எதிராக சாட்சி சொன்னவர்கள் மர்மமாக இறக்கிறார்களா..! மரணங்களில் தொடரும் மர்மம்..
முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்னவின் மரணம் தவறான முடிவெடுத்து எடுக்கப்பட்ட உயிர்மாய்ப்பா அல்லது கொலையா என்ற சந்தேகம் எழும்பியுள்ளதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
உயிரிழந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் பல முக்கிய வழக்குகளில் சாட்சியமளித்தவர் என்பதால், இதன் பின்னணியில் அரசியல் அழுத்தம் இருக்கலாம்.
ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக சாட்சி சொல்பவர்கள் மர்மமான முறையில் இறப்பது சந்தேகமாக உள்ளது. இது போன்ற நிகழ்வுகள் சாட்சிகளை அச்சமடையச் செய்யும்.
அரசாங்கம் இத்தகைய மரணங்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, அது கொலையா அல்லது தவறான முடிவா என்பதை உறுதியாக நிரூபிக்க வேண்டும் ஒரு அதிகாரியின் பூதவுடல் எடுத்துச் செல்லப்படும்போது அரச மரியாதை வழங்கப்பட வேண்டுமானால், அவர் கொலை செய்யப்பட்டார் என்பது கட்டாயம் நிரூபிக்கப்பட வேண்டும். தற்கொலை என்றால் அவருக்கு அரச மரியாதை வழங்கப்பட மாட்டாது.
பூதவுடலை ஒப்படைப்பதற்கு முன்பாகவே, அரசாங்கம் வைத்திய அறிக்கையின் அடிப்படையில் ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார். மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri