முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் நாமல் ராஜபக்சவை ஆதரிக்க முடிவு செய்தமை தொடர்பில் குழப்பம் - ஹரின் பெர்ணான்டோ
முன்னாள் கிரிக்கெட் வீரர்களான குமார சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோர்,விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவை ஆதரிக்க முடிவு செய்தமை தொடர்பில் குழப்பமடைந்துள்ளதாக விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
தாம் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த போது குமார சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகிய இருவரும் கிரிக்கட் விளையாட்டை மேம்படுத்தும் தமது திட்டத்துக்கு ஆதரவளிக்க முன்வரவில்லை.
எனினும் தற்போது அவர்கள் எவ்வாறு உடன்பட்டனர் என்பது தொடர்பில் தாம் குழப்பமடைந்துள்ளதாக ஹரின் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நேரத்தில் அரசாங்கம் மிகவும் உறுதியானது அல்ல என்பதால் அவர்கள் சர்ச்சையை விரும்பாமல் இருந்திருக்கலாம் என்றும் ஹரின் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், அவர்கள் அழுத்தங்களினால் அல்ல. ஆர்வத்தின் காரணமாக நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவளித்தால் அதில் சந்தோசமடைவதாக ஹரின் பெர்ணாண்டோ குறிப்பிட்டுள்ளார்.





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
