போதைப்பொருள் மற்றும் கைத்துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவச்சிப்பாய் கைது
கொழும்புக்கு அருகே முன்னாள் இராணுவச்சிப்பாய் ஒருவர் போதைப்பொருள் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திடீர் சுற்றிவளைப்பு
மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
களனிய கொஹல்வில பிரதேசத்தில் நேற்றிரவு பத்து மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
குறித்த இராணுவச் சிப்பாய் கமாண்டோ படைப்பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41வயதுடையவர் என்றும் கல்நேவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
அவரிடம் இருந்து வெளிநாட்டுத்தயாரிப்பான கைத்துப்பாக்கியொன்றும், அதற்கான துப்பாக்கி ரவைகள் 10ம், இராணுவச் சீருடைகள் இரண்டும் 110 கிராம் ஐஸ் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




