முன்னாள் இராணுவ தளபதி குறித்து வெளியான தகவல் பொய்யானது
முன்னாள் இராணுவ தளபதி தயா ரட்நாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகியதாக வெளியான செய்தி தவறானது என அந்தக்கட்சியின் அதிகாரபூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
ரத்நாயக்க மௌபிம ஜனதா கட்சியில் இணைந்து கொண்டதாக வெளியான தகவலும் பொய்யானது என பிரசார முகாமையாளர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
செய்தி தவறானது
அத்துடன் ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள புகைப்படமும் பழைய புகைப்படம் என்று சேனசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவினால், ஜெனரல் ரத்நாயக்க சிரேஸ்ட ஆலோசகராக நியமித்ததை அடுத்து, கட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக, கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தயா ரட்நாயக்கவின் நியமனத்தை, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
