மகிந்தவின் நெருங்கிய உறவினர் அதிரடியாக கைது! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
புதிய இணைப்பு
அயல் வீட்டாரைத் தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அவர் கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை மிரிஹான பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் குற்றச்சாட்டு
தனது அயல் வீட்டில் வசிக்கும் நபர் மீது தாக்குதல் நடத்தியக் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில், நேற்றையதினம் மிரிஹான பொலிஸாரிடத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த முறைப்பாடு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இன்று காலை உதயங்க வீரதுங்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட உதயங்க வீரதுங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.