பொய்யுரைக்க வேண்டாம்! சபையில் அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய எம்.பி

Parliament of Sri Lanka Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices Minister of Energy and Power
By Chandramathi Jan 10, 2025 03:41 AM GMT
Report

ஆட்சிக்கு வந்தவுடன் மின்கட்டணத்தை குறைப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வாக்குறுதியளித்தார். தற்போது இல்லை என்று குறிப்பிடுகின்றீர்கள். பொய்யுரைக்க வேண்டாம். இதனால் தான் இந்த அரசாங்கத்தை பொய்யர்களின் அரசாங்கம் என்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(09) நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இன வன்முறையை தூண்ட முயல்வோருக்குச் சிறைதான் வாழ்க்கை! எச்சரிக்கும் ஹரினி

இன வன்முறையை தூண்ட முயல்வோருக்குச் சிறைதான் வாழ்க்கை! எச்சரிக்கும் ஹரினி

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,''மின்கட்டணம் குறைப்பு ஊடாக நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள்.

நிவாரணம்

தேர்தல் காலத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்தவுடன் குறுகிய காலத்தில் மின்கட்டணத்தை 35 சதவீதத்தால் குறைப்பதாக வாக்குறுதியளித்தார்.

பொய்யுரைக்க வேண்டாம்! சபையில் அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய எம்.பி | Electricity Bill Reduced In Sri Lanka

5000 ரூபா கட்டணத்தை 3000 ரூபாவாகவும், 9000 ரூபாவை 6000 ரூபாவாகவும் குறைப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால் தற்போது கட்டணம் குறைக்கப்படவில்லை.

மின்சார சபை 167 பில்லியன் ரூபா இலாபமடைந்துள்ளது. எவருக்கும் கடன் இல்லை ஆகவே மின்சார சபை கடன் என்று பொய்யுரைக்க வேண்டாம்.

பேருந்து அலங்காரங்களை அகற்றுவது கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் அல்ல! ஜகத் மனுவர்ன விளக்கம்

பேருந்து அலங்காரங்களை அகற்றுவது கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் அல்ல! ஜகத் மனுவர்ன விளக்கம்

 

6.1 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பதாக மின்சார சபை முன்வைத்த முன்மொழிவை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இரத்துச் செய்து மின்கட்டண திருத்த முன்மொழிவை மீளாய்வு செய்யுமாறு மின்சார சபைக்கு அறிவுறுத்தியிருந்தது.

தேசிய மின்னுற்பத்தி கட்டமைப்பில் 56 சதவீதம் நீர்மின்னுற்பத்தியின் ஊடாக பெற்றுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறான நிலையில் ஏன் 6 மாத காலத்துக்கு மின்கட்டண திருத்தத்தை பிற்போட வேண்டும் என்பதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டும் என கேள்வியெழுப்பியுள்ளார்.

மின் கட்டணம்

இதற்கு பதிலளித்த எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, மின்கட்டணத்தை ஓரிரு நாட்களில் குறைப்பதாக குறிப்பிடவில்லை. 3 வருட காலப்பகுதிக்குள் மின்கட்டணத்தை நிலையான தன்மையில் பேணுதற்கும், மின் கட்டமைப்பை மேம்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டது என கூறியுள்ளார்.

பொய்யுரைக்க வேண்டாம்! சபையில் அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய எம்.பி | Electricity Bill Reduced In Sri Lanka

மீண்டும் எழுந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த நவம்பர் மாதம் 09 ஆம் திகதி தம்புள்ளை பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் மின்கட்டணத்தை குறைப்பதாக குறிப்பிட்டார்.

தற்போது மின்கட்டணத்தை ஓரிரு நாட்களில் குறைப்பதாக குறிப்பிடவில்லை என்று அமைச்சர் குறிப்பிடுகிறார். ஏன் பொய்யுரைக்கின்றீர்கள், காலை முதல் இரவு வரை பொய்யை மாத்திரமே குறிப்பிடுகின்றீர்கள். இதனால் தான் இந்த அரசாங்கத்தை பொய்யர்களின் அரசாங்கம் என்று குறிப்பிடுகிறோம் என்று கூறியுள்ளார்.        

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US