வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
சுற்றுலா விசாவில் மலேசியா சென்று அந்நாட்டில் வேலை விசாவாக மாற்ற முடியும் என கூறி மோசடி நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..
இந்த நடவடிக்கையில் ஈடுபடும் ஆட்கடத்தல் கும்பலை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விசா மோசடி

அவ்வாறான எந்தவொரு விசா நடைமுறையும் இல்லையெனவும், இவ்வாறான மோசடியாளர்களிடம் சிக்கவேண்டாம் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. .
அத்துடன், வெளிநாடு செல்வதற்கு முன்னர் தமது வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது தொடர்பான விழிப்புணர்வுக்காக பொலிஸார் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri