இருபது வருடங்களாக வியாபாரம் செய்த இடத்திலிருந்து அகற்றும் வன இலாகா அதிகாரிகள் (PHOTOS)
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் ஓட்டமாவடி கொழும்பு பிரதான வீதியில் மஜ்மாநகர் சந்தியில் உள்ள காணியில் கடை அமைத்து வியாபாரம் செய்து வரும் தன்னை வாழைச்சேனை வன இலாகா அதிகாரிகள் உடனடியாக எழும்புமாறு கோரியுள்ளதாக சம்பந்தப்பட்ட வியாபாரியான ஏ.எல்.அப்துல் கலீம் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் வியாபாரி தெரிவித்ததாவது,
குறித்த காணியில் இருபது வருடங்களுக்கு மேலாக எனது தந்தை சிறிய கடை அமைத்து வியாபாரம் செய்து வந்த நிலையில் பின்னர் நான் அதே இடத்தில் சாப்பாடு, சர்பத், இளநீர், தேனீர் போன்றவற்றை வியாபாரம் செய்து வருகின்றேன்.
அத்தோடு நான் இங்கு வியாபாரம் செய்வதற்கு என்னால் ஓட்டமாவடி பிரதேச சபையில் வியாபார அனுமதிப் பத்திரம் பெற்றுள்ளதுடன், மின்சார பட்டியலும் எனது பெயரியல் வருவதுடன், குறித்த காணிக்காக என்னால் விண்ணப்பித்த உறுதிப்படுத்தும் சான்றிதழும் என்னிடம் உள்ளது.
இந்த நிலையில் தற்போது வாழைச்சேனை வனஇலாகா அதிகாரிகள் வருகை தந்து என்னை இவ்விடத்தில் இருந்து எழும்பி செல்லுமாறு கோரியுள்ளனர். இது என்னுடைய இடம் என்பதற்கு என்னிடம் பல ஆதாரங்கள் இருந்தும் என்னை அகற்ற முற்படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
குறித்த இடத்தில் மேற்கொள்ளும் வியாபாரத்தின் மூலம் எனது குடும்பத்தின் வாழ்வாதாரம் தங்கி உள்ளது. எனவே உடனடியாக நாட்டின் ஜனாதிபதி மற்றும் அரச அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு என்னுடைய இடத்தில் நான் வியாபாரம் செய்வதற்கு உரிய நடவடிக்கையை வழங்கி உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என குறித்த வியாபாரி கோரிக்கை விடுத்துள்ளார்.








தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
