யாழில் தமது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களை பார்வையிட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினர்
யாழ்ப்பாணம் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் உள்ள தமது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களை இன்று(01.04.2025) பார்வையிட்டு இடங்களை எல்லைப்படுத்தி சென்றுள்ளனர்.
குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்த வன ஜீவராசிகள் திணைக்களத்தினர், தமது பிரதேசத்தில் வளங்கள் சூறையாடப்படுவதாகவும் அது தொடர்பாக எந்த தகவல்கள் தெரிந்தாலும் உடனடியாக தெரியப்படுத்துமாறும் தெரிவித்துள்ளனர்.
மேலும், வளங்களை கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கபடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தமது எல்லைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் தமது அனுமதியுடன் கட்டடங்கள் அமைப்பதற்கு தாம் அனுமதி கொடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒருபோதும் வெளியேற்ற மாட்டோம்
எனினும், மருதங்கேணி பருத்தித்துறை வீதியின் ஆற்றங்கரை பக்கம் தாம் எந்த வித அனுமதியும் கொடுக்க மாட்டோம் எனவும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏனெனில், அந்த எல்லைகள் அதிவிசேட எல்லைகளுக்கு உட்பட்டு இருப்பதால் கட்டிடங்களுக்கு அனுமதி கொடுப்பது கடினம் எனவும் விளக்கியுள்ளனர்.
இதேவேளை, தமது எல்லைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் இருப்போரை நாம் ஒருபோதும் வெளியேற்ற மாட்டோம் எனவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
