காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளான வெளிநாட்டவர் பலி
பொத்துவில் மணச்சேனை, கோமாரிய பிரதேசத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் காட்டு யானையினால் மிதியுண்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இத்தாலிய சுற்றுலாப் பயணியான 50 வயதான ஜிஞ்சினோ பாலோ, மற்றுமொரு இத்தாலிய சுற்றுலாப் பயணியுடன் கொமரியா பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது குறித்த சுற்றுலாப்பயணி காயமடைந்த நிலையில், 1990 அவசர நோயாளர் காவு வாகனம் மூலம் பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட போது அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் அத்தியட்சகர் வெஹித தேவபியவின் பணிப்புரையின் பேரில் பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கமல் செனவிரத்ன மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |