கொள்ளுப்பிட்டி ஹொட்டலில் வெளிநாட்டுப் பெண்கள் கைது
வெளிநாட்டுப் பெண்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட பாலியல் தொழில் விடுதி ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார் 5 வெளிநாட்டுப் பெண்களையும் முகாமையாளராக செயற்பட்ட ஒருவரையும் நேற்று கைது செய்துள்ளனர்.
கொழும்பு கொள்ளுப்பிட்டிய கடற்கரை மாவத்தையில் உள்ள ஹொட்டல் ஒன்றில் இந்த விடுதி இயங்கி வந்துள்ளது. பாணந்துறை வலான மோசடி தடுப்பு பிரிவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
20 முதல் 30 வயதான தாய்லாந்து நாட்டுப் பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதியில் இருந்து கருத்தடை சாதனங்கள் மற்றும் ஐஸ் போதைப் பொருளை நுகர்வதற்கு பயன்படுத்தப்படும் உபகரணம் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சுற்றுலா விசா மற்றும் தொழில் விசாவில் இலங்கை வந்துள்ள இந்த தாய்லாந்து பெண்களில் இருவரிடம் கடவுச்சீட்டுக்கள் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொட்டல் உரிமையாளரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.