ஜனாதிபதி ரணில் தலைமையில் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளவுள்ள வெளிநாட்டு பயணம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கிய குழுவொன்று வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, சுற்றாடல் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல, காலநிலை மாற்ற ஜனாதிபதியின் ஆலோசகர் ருவான் விஜேவர்தன மற்றும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 80 பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவே இந்த பயணத்தில் ஜனாதிபதியுடன் கலந்து கொள்ளவுள்ளனர்.
பயணச் செலவுகள்
துபாயில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை தொடர்பான மாநாட்டுக்காகவே இந்த குழு பயணிக்கவுள்ளது.
இந்தக்குழுவில் தொழில்நுட்ப பிரதிநிதிகள் 15 பேரும் அமைச்சக அதிகாரிகளும் உள்ளடங்கியுள்ளனர். அத்துடன் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் 20 இளைஞர் பிரதிநிதிகளும் பயணத்தில் இணைகின்றனர்.
இந்நிலையில் அரசியல் மற்றும் தொழில்நுட்ப பிரதிநிதிகளுக்கான பயணச் செலவுகள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகவில்லை எனினும் சுயநிதி அல்லது பிற அமைப்புகளால் நிதியுதவிகளை பெற்றே அவர்கள் துபாய்க்கு பயணிக்கின்றார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |