சுற்றுலாத்துறையில் புதிய சாதனை: ஒரு மில்லியனை கடந்த வெளிநாட்டு பயணிகள் வருகை
நடப்பு ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது ஜனவரி மாதத் தொடக்கத்திலிருந்து இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது.
இதன்படி, ஜனவரி 01 முதல் கடந்த வியாழக்கிழமை (28) வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,010,807 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
மே மாதத் தொடக்கத்திலிருந்து நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 134,530 என்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. மே மாதத்தில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில், அதிகபட்சமாக 56,063 பேர் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.
இரண்டாவதாக, 8,582 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்து வந்துள்ளனர்.

மூன்றாவதாக, 8,439 பேர் சீனாவிலிருந்து வந்துள்ளனர். இதற்கிடையில், இந்த ஆண்டில் அதிகபட்சமான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.
அவர்களின் மொத்த எண்ணிக்கை 245,981 பேராகும். மேலும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 97,427 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 75,963 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், நடப்பு ஆண்டில் அதிகபட்சமாக 277,327 சுற்றுலாப் பயணிகள் கடந்த பெப்ரவரி மாதத்தில் வருகை தந்துள்ளனர்.
ஜனவரி முதல் இன்று வரையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பொறுத்தவரை, பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் படிப்படியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan