வெளிநாட்டு அரசியல் கட்சியை இலங்கையில் பதிவு செய்ய முடியாது! - தேர்தல் ஆணையாளர்
வெளிநாட்டு அரசியல் கட்சி ஒன்றை இலங்கையில் பதிவு செய்ய முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜீ. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சி இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் ஆரம்பிக்கப்படும் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக திரிபுரா மாநில முதமைச்சர் அண்மையில் கூறியிருந்தார்.
இது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே தேர்தல் ஆணையாளர் இதனை கூறியுள்ளார். இலங்கையின் அரசியல் கட்சியை ஒன்றை பதிவு செய்ய வேண்டுமானால் கூட நான்கு ஆண்டுகள் அந்த கட்சியின் அரசியல் நடவடிக்கைகளை கண்காணித்த பின்னரே பதிவு செய்யப்படும்.
இலங்கை பிரஜை அல்லாத ஒருவருக்கு இலங்கையின் அரசியல் கட்சி ஒன்றில் அங்கத்துவத்தை பெறுவதும் சிக்கலுக்குரியது எனவும் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
