காது கேட்காதவர்கள் போல் இருக்க முடியாது! அரசாங்கத்தை எச்சரித்த இராஜாங்க அமைச்சர்
இராஜாங்க அமைச்சர் நிமால் லன்சா, அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு உள்ளேயும்,வெளியேயும் மேற்கொள்ளப்படும் விமர்சனங்களை உதாசீனம் செய்யக்கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் பிரச்சினைகளையே மக்கள் பிரதிநிதிகள் பேசுகின்றார்கள் என்பதனை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்தாலும் மக்களின் பிரச்சினைகள் பற்றி பேச வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் பொருட்களுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பது நல்ல விடயமல்ல எனவும், இதற்காக மக்கள் பிரதிநிதி என்ற வகையில் கவலையடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் தங்களது கருத்துக்களை வெளியிட சுதந்திரம் உண்டு எனவும், மக்களின் கருத்துக்களையே மக்கள் பிரதிநிதிகள் வெளியிடுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான விமர்சனங்களை உதாசீனம் செய்யாது, அரசாங்கம் இது குறித்து விரிவாக கலந்துரையாடி தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் கட்புலன் செவிப்புலனற்றவர்களாக இருந்துவிட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டொலர் கையிருப்பு பற்றாக்குறையினால் நாட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது எனவும் நிமால் லன்சா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
கடும் நெருக்கடியில் இலங்கை! - சீனாவிடம் உதவி கேட்ட கோட்டாபய (பத்திரிக்கை கண்ணோட்டம்) |




