இலங்கையின் ஜனாதிபதி தேர்தல்: விசா இன்றி தடுமாறும் வெளிநாட்டு செய்தியாளர்கள்
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்களைப் பற்றி செய்தி சேகரிக்க முயற்சிக்கும் சர்வதேச ஊடகவியலாளர்கள், விசா தாமதங்கள் அல்லது விசா மறுப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அனைத்து நடைமுறைகளை பின்பற்றி;யும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலருக்கு இன்னும் விசா அனுமதி கிடைக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து, இலங்கையின் வெளிநாட்டு செய்தியாளர் சங்கம், நிலைமைக்குறித்து,பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
இலங்கை தூதரகங்கள்
தங்கள் நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மூலம் விசாவிற்கு விண்ணப்பித்த தமது சக ஊடகவியலாளர்கள் விசாக்களை பெறமுடியாதுள்ளதாக செய்தியாளர் சங்கம், அலஸிடம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த காலங்களில், இந்த விசாக்கள், இலங்கையின் தகவல் திணைக்கள இயக்குநரின் அங்கீகாரத்தின் கீழ் வழங்கப்பட்டன.
எனினும் தற்போது குறித்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. வழமையாக, வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் முறையான அங்கீகாரம் இல்லாமல் தமது செய்தியாளர்களை ஏனைய நாடுகளுக்கு செய்தி சேகரிப்புக்களுக்காக அனுப்பப்போவதில்லை.
எனவே, இந்த விடயத்தில் தலையிட்டு செய்தியாளர்களுக்கு விசா அனுமதிகளை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று இலங்கையின் வெளிநாட்டு செய்தியாளர் சங்கம் கோரியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
