வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பலரை ஏமாற்றிய பெண்ணுக்கு நேர்ந்த கதி
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பலரை ஏமாற்றி பணமோசடி செய்த பெண் ஒருவரை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினர், கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றினை முன்னெடுத்து வந்த, பெண் உரிமையாளர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி, சுமார் 40 இலட்சம் ரூபாயை அவர் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பண மோசடி முறைப்பாடு
இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினருக்கு 14 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில், குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பெண்ணினால் முன்னெடுக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அனுமதி பத்திரமும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





மாதனமுத்தாக்களின் சோம்பேறிப் போராட்டமும் ஈழத் தமிழ் அரசியலும் 42 நிமிடங்கள் முன்

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

புதிய வீட்டிற்கு செல்லும் வேல்ஸ் இளவரசர் வில்லியம், கேட் தம்பதி! அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri
