தனியார் துறை கடன் வாய்ப்புகள் முடக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு குகதாசன் எம்.பி வலியுறுத்து
தனியார் துறை கடன் வாய்ப்புகள் முடக்கப் படுவதைத் தடுக்க, அரச படுகடன் முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளபடி, அரசுக்கடன் மேலாண்மை அலுவலகமானது மேலாண்மை நடவடிக்கைகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரித்தார்.
நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாட்டு நாணயமாற்று நிருவாகத்தைச் சீரமைக்க, வணிக வங்கிகள், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகத் திணைக்களம் ஆகியவற்றை இணைக்கும் ஒருங்கிணைந்த எண்மிய சரிபார்ப்பு இணையத் தளத்தை அரசு உருவாக்க வேண்டும்.
பொருளாதாரத் தூண்டுதல்கள்
பொதுக் கடன் நடவடிக்கைகளின் சுதந்திரத்தை உறுதி செய்யும் பொருட்டாக, கடன் வாங்கும் திட்டங்களைக் மேற்பார்வையிட ஒரு சுதந்திரமான தொழில்நுட்ப அறிவுரைக் குழுவை நிறுவ வேண்டும்.
இறுதியாக, வெளிநாட்டு நாணயமாற்றுச் சட்டத்தின் கீழான பிரிவு 22 இன் கட்டளைகள், மாறும் தன்மையுடைய, புறநிலை அளவு கோல்களை நோக்கி நகர வேண்டும்.

தெளிவான பொருளாதாரத் தூண்டுதல்கள் பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு உறுதியை அளிப்பதோடு, இலங்கை நிலையான திறந்த நிதித் தன்மைக்கு உறுதிபூண்டுள்ளது என்பதையும் வெளிப்படுத்துகின்றன.
இன்று நம் முன் உள்ள இந்தச் சட்டவாக்க சீர்திருத்தங்கள் பொருண்மிய நிலைத் தன்மைக்கான கட்டமைப்புச் சட்டகத்தை வழங்குகின்றன எனக் குறிப்பிட்டார்.